கவிதைகள்

Friday, June 4, 2010

கவிதைகள்.....கவிஞர்களின் உளறல்கள்!

கவிதைகள்.....

கனவுகளின் தேடல்கள்!

கற்பனைகளின் உதிர்வுகள்!

நிஜங்களின் நிழல்கள்!

நிகழ்வுகளின் பிம்பங்கள்!

எண்ணங்களின் சிதறல்கள்!

எதிர்பார்ப்புகளின் தோல்விகள்!

இயலாமையின் வடிகால்கள்!

இறுதிகளின் துவக்கங்கள்!

கருத்துக்களின் புதையல்கள்!

காலங்களின் சுவடுகள்!

வாழ்க்கையின் வடிவங்கள்!

வார்த்தைகளின் கோர்வைகள்!

ஆம்

என்றைக்குமே...

இவை

கவிஞர்களின் உளறல்கள்!

No comments:

Post a Comment